Sunday, September 8, 2013

வேலன் வரும் வேளை


இந்த பயணம் புதிதல்ல, தொடர்பு புதிதல்ல

பிரிவும் அப்படித்தான் போலும், உன் கதைகளில் கேட்ட வாறே
எத்தனை பிரியமோ, அத்தனை பிரிவின் வெப்பம்

எத்தனை வேண்டினேனோ கண் குளிர‌ தரிசனம்,
அத்தனை சிந்தினவோ அவ்வெப்பம் தணிய கண்ணீர்!

கோடான கோடிகளின் கண்ணீரை துடைப்பவர், 
நான் வரிசையின் கோடியில் உள்ளேனென
பிரிவின் தாகம் தீர, என் கண்ணீரே போதுமென உய்த்தீரோ?

உண்மை என்னவென்று புரியாதவனுக்கு 
உளம் நிறைய கண்ணீர்தான் ஆறுதலோ?

நீர் வர, காத்திருக்கும் கணங்களும் இனிக்குதய்யா! விறகமாயினும், இக்கணங்களை உள்ள வரை நினைக்கத்தோன்றுதய்யா!

நீர் விழும் விழிகளோடு என்னக்கூறுவெனோ? ஏன் வர தாமதமோ?
நீர் உய்த்த கண்ணீரில் இன்று உப்பைக்கண்டீரோ?