Sunday, June 30, 2019

சித்தனும் சிற்பியும்




தோழன் தோள் மீது வஞ்சகம் விழாமல்
                இடுக்கண் களைய கொடுத்த நாடாம் அங்க தேசம்.
அங்க தேச எல்லையில் வாழ்ந்துவந்தான் ப்ரகதியன் எனும் சிற்பி
            அங்கமெல்லாம் கண்ணனை காணாத விரகம் கொண்டவன்…
சிற்பம் தீரும் வரை மேய் திகழ, ஏக்கம் சோராமல்
            மூச்சிற்கு முன்னூறு முறை கண்ணன் பெயரை கூறுபவன் 

சிற்பி, சீர்மேவும் சேவடியில் வாழ்ந்து கழிப்பேனோ
            என கண்ணனை வேண்டும் நாட்களில் ஒரு நாள், 
அவன் மனம் குளிர செய்தி ஒன்று வந்தது காற்றோடு …
            காசியை நாடும் சித்தன் ஒருவன், 
தன் ஊர் வழியே செல்ல போகிறான் எனும் பொற்ச்செய்தி அது.
                சந்தோஷம் பெறுக, சித்தன் வரும் வழி மீது விழி வைத்தான் சிற்பி

சித்தன், ஊரை வலம் வந்தும் கூட,
                சிற்பியின் வீடு வழியே வர இயலவில்லை.
அண்ணலை பார்க்க முடியாமல் போனதே, என்ற துயரம்
                சிறிதும் இல்லாமல் மீண்டும் சிற்பம் தீர்க்கத்துடங்கினான் சிற்பி.
கண்ணன் நாமம் முழங்கும் சிற்பியின் வீட்டை
                தேடி வந்தான் அவன் நண்பன் சந்தனன்

துயர் வந்த சுவடே இல்லையே, ப்ரகதீயா ?
                எப்படி தீர்த்தாயோ எனக்கும் சொல்லேன்” என்று கோர
ப்ரகதியன் விடை குடுத்த வாக்கே, 
                சித்தன் பிற்காலத்தில் எழுதிய நூலின் முதற்கண் வரிகளாகிறது....

"காணும்போதே வீழ் கற்களையும் சிலையைச் சேரும் கற்களையும்  
சீராய் கருதும் சிற்பியை போன்றவன் தான் என் கண்ணன்.
துயர் எவ்வளவு இருந்தாலும் வீழ்கற்கள்  சிலையில் இல்லாததே, அதன் வெற்றி. 
வீழ்கற்கள் வீழ்வதே தீரும் சிலையின் அழகு.
அழகான சிலையாம் சித்தன் கண்ட ஊர். வீழ மருப்பேனோ கல்லாகிய நான் ? "