Monday, February 11, 2013

அந்தக்கணம்










 
 
 





சிவ‌னை காண ஆவ‌ல் பெருகி நிற்க்கையில்

அவ‌ரை க‌ண்ட‌தும் இய‌ல்பு ம‌றந்த‌க்க‌ணம் அது .

சுற்றத்தில் காண்ப‌வ‌‌ரெல்லாம் சிவ‌ க‌ண‌ங்களாக‌ தென்ப‌ட்ட கண‌ம் அது.

அவ‌ர் வ‌ர இருக்கும் சில‌ க‌ண‌ங்கள் க‌ட‌வாதோ கண் சிமிட்டுகயில்?

ஆத‌வ‌ன் வ‌ர‌, க‌ண் ஸிமிட்டாம‌ல் காத்திருந்த‌ச் சூரிய‌காந்தியாக‌ நின்றக்க‌ண‌ம் அது.

 

அன்ன‌ம‌ய‌மான‌ உட‌லின் ஆசைக‌ள், கூரிருளென‌ மூட்ட‌ம் இட‌ ,

வ‌ற‌ம்பும் விள‌க்க‌மும் கேளா ந‌தியாய் குதித்தோட‌ ;

அட‌ங‌கா ஒளிப்பெருக்காய் சிவ‌னை வ‌ர‌க்க‌ண்ட‌ க‌ண‌ம் அது.

ஆவ‌ல் ம‌ல்கும் மொட்டுக்களை த‌ம் ஒளிக்கதிரால் த‌ழுவ‌க்கண்டேன்.

 

ஆயிர‌மடா, ஆன‌ந்த‌ம் க‌சிந்த‌ க‌ன்ன‌ங‌க‌ள்.

ஆயிர‌மடா, த‌ழுவிய‌ க‌ணமே ம‌ல‌ர்ந்த‌ மொட்டுக்க‌ள்.

அவ‌ர் கைப‌ட்ட‌ க‌ன்னங்க‌ளில் கண்ணீர் உல‌ரும் முன்பெ,

ஆசை ச‌ற்றென்ரு தோன்றிய‌ கணம் அது.

அவ‌ர் கையொடு தின‌ம் ம‌ல‌ரும் பூவாய் பிறவெனோ ?

... என்று சேவையில் ஆய‌த்த‌மான முத‌ற்க்கணம் அது .








 

No comments:

Post a Comment